கடந்த வாரத்தில், ஏர்டெல் நிறுவனம் தனது அதிவிரைவு இழை இணைய தொழில்நுட்பம் ஆன வி-ஃபைபர் தொழில்நுட்பத்தை அறிவித்து தலைப்பு செய்திகளை கிளப்பியது. உடன் இந்த இருக்கும் ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டமானது வாடிக்கையாளர்கள் ஏற்கனவே இருக்கும் திட்டத்தில் இருந்து மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாபைபர் பிராட்பேண்ட் சேவையைப் போலவே ஏர்டெல் வி-பைபர் சேவையும் மூன்று மாத கால இலவச மற்றும் வரம்பற்ற அழைப்புகள் (உள்ளூர் மற்றும் வெளியூர் இரண்டும்) மற்றும் இணையம் ஆகியவைகளை உள்ளடக்கி வருகிறது. அடிப்படையில் ஒரு அதிவிரைவு இணைப்பு வழங்கும் நோக்கத்தோடு ஒரு வெக்டரைசேஷனுக்கு மற்றும் ஃபைபர் தொழில்நுட்பம் கலவையாக ஏர்டெல் வி-பைபர் உள்ளது. அப்படியாக ரிலையன்ஸ் ஜியோ ஜிகாபைபர் சேவை மற்றும் ஏர்டெல் வி-பைபர் சேவை ஆகிய இரண்டிற்க்கும் உள்ள 5 முக்கியமான வேறுபாடுகள் என்ன என்பதை பற்றிய தொகுப்பே இது.!
Comments
Post a Comment